மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

திங்கள், 25 ஜூலை, 2011

திருக்குறள் வகுப்பு [ இரண்டாம் ஆண்டின் முதல் வகுப்பு ] தி.ஆண்டு 2042, ஆடவை 29

திருக்குறள் வகுப்பு [ இரண்டாம் ஆண்டின் முதல் வகுப்பு ]                                                          நாள் 14 -07 -2011
                                                                            அதிகாரம்-  கண்ணோட்டம்
வணக்கம்..
குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் இன்று தமிழ்த்திரு.பொன்னிராமன் அவர்களில்லத்தில் திருக்குறள் வகுப்பு இரண்டாவது அடியை ஏற்றமுடன் எடுத்தடி வைத்தது..! இரண்டாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையோடு     
இன்றைய மாலை மிக இனிதாக  மலர்ந்தது. ! எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய வகுப்பு நிறைவாக அமைந்தது.!
அங்கங்கே கொடுங்கோலர்களும் கொடும்போர்ச்சூழலும் மும்பை குண்டு வெடிப்பின் மரண ஓலங்களும்  உலகைப் பதட்டமான நிலையில் வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் கருணை, இரக்கம் என்ற மனிதனின் உயரியப் பண்புகளாக வள்ளுவம் உரக்கப் பேசுவதை இந்த வார படிப்பினையாக நம்  மனதில் நிலை நிறுத்திய வகுப்பாசிரியர் தமிழ்த்திரு. சேதுமாதவன் அவர்களை எவ்வளவுபாராட்டினாலும் தகும்..!
அடுத்து, கடந்த வாரம் நடந்த சிறப்பு விழாவிற்கான வரவு செலவு கணக்கை தமிழ்த்திரு தமிழ்நாடன் அவர்கள்
வகுப்பிற்கு அறியப்படுத்தினார்..! அடுத்து வரும் சிறப்பு விழாக்களுக்கான செலவினை பகுதியாக குறைக்கவேண்டும்
என்ற தமிழ்நாடன் அவர்களின் கருத்து அனைவராலும் ஒப்புநோக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது..!
 சிறப்பு விழா பற்றிய அனைவரின் கருத்துக்களும் செவிமடுக்கப்பட்டு விவாதப் பொருளாகி ஆகுபயன்களைப்
ஆராய்ந்து அவை நேரங்கள் அரிய நேரங்களாக பதிவானது !
குவைத்வாழ் தமிழர்களிடையே தனித்திறன் வளர்ச்சிக்காக ஒரு பயிற்சிப் பட்டறை அமைக்கவேண்டும்
என்னும் ஆகச்சிறந்த எண்ணத்திற்கு ஒரு வடிவமைப்பாக தமிழ்நாடன் அவர்களால்  கொண்டுவந்து படிக்கப்பட்ட
செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்ட விதம்  வகுப்பினரிடையே உள்ள  கருத்தொற்றுமையை பறைசாற்றியது..!
அதற்கான தொடக்கப் பொறுப்பு தமிழ்த்திரு. முத்து குமரன் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்ட முடிவு
ஏற்றதொரு செயலுக்கு எரிநட்சத்திரமாக எல்லோர் நெஞ்சிலும் மின்னியது..!
முடிவில் உதயம் பாலு அவர்களின் இரவு உணவின் இன்சுவை விருந்தோடு வகுப்பு இனிதாக நிறைந்தது..!
 குறிப்பு -திருக்குறள் வகுப்பின் ஒருங்கிணைப்பிற்கு திரு முனு. சிவசங்கரன் பணிக்கப்பட்டுளார்.!

தொகுப்பு: திரு.முனு.சிவசங்கரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக