திருக்குறள் வகுப்பு ! நாள்; தி.வ .ஆண்டு 2042
28 -07 -2011
அதிகாரம்: ஊக்கம் உடைமை
திரு. இராமன் அவர்கள் இல்லத்தில் இந்த வாரமும் வகுப்புத் தொடர்ந்து நடந்தது..!
எதுவுமே உழைப்பின்றி இலவசமாய் கிடைக்கவேண்டும் என்ற மாந்த நிலையில் மதி
மயங்கிக் கிடக்கும் மக்களுக்கு தெளிவை உண்டாக்க தேவையொரு மருந்தென்ற
சூழலில் கைகண்ட அமுதமாக இந்த திருவள்ளுவ மாமருந்தான ஊக்கம் உடைமை தக்கதொரு தருணத்தில் வள்ளுவ வகுப்பில் வழங்கப் பட்டது வலிந்து ஏற்கப்பட வேண்டியது..!
ஊக்கம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன...? ஆசிரியர் வினாவோடு தொடங்கினார் வகுப்பை...! முயற்சி, சோர்வின்மை,விடாமுயற்சி, ஈடுபாடு, தன்னம்பிக்கை, போன்ற பலதரப்பட்ட விடைகள் பகரப்பட்டன..!ஆசிரியர் அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு தன் இயல்பில் வகுப்பைத் தொடர்ந்தார்..! ஊக்கம் என்பதை முதன்மைப் பொருளாகவும் நிலையானதாகவும் முதலிரண்டு குறள்களில் முன்னெழுதித் தந்த வள்ளுவத்தை முகந்தளந்து ஊட்டினார் ஆசிரியர்..! கைப்பொருளை இழந்தாலும் களவாட முடியா மெய்ப்பொருளான ஊக்கம் இருந்தால் போதும் என்ற குறள் மொழி ஆய்ந்து அளிக்கப்பட்டது ! இது வைப்பு நிதி இழந்தாலும் வள்ளுவம் இருந்தால் போதும் என்பதாக இருந்தது! நாக்கில் தேன்தடவி நான்காம் குறள்வழி நயந்தூட்டும் மருந்தை ஆசிரியர் முரண்நகையோடு எடுத்துக்கூறினார்..! ஆம்.. இன்றைய அரசியல்வாதிகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே ஒன்று இந்த ஊக்கம்தான் என்றவர் கூறியது இறுக்கமான வகுப்பை இளகவைத்தது...!
அதிகாரத்தின் மையப்பொருளாக ஐந்தாம் குறள் அமைந்திருப்பதை ஆசிரியர் அழகுறக் கூறினார்..!எண்ணுவதெல்லாம் ஏற்றமானதாக இருக்கவேண்டும் என்ற கருத்தமைந்த ஆறாம் குறளைத் தொடர்ந்து யானை வழி ஏழாவதில் எடுத்துக்கூறிய குறட்கருத்தை
வலியுறித்தினார் ஆசிரியர்..!
அடுத்ததில் தலைநிமிர்ந்து செல்லும் தகைமையை ஊக்கம் இல்லாதவர் பெறமுடியாது என்ற வள்ளுவரை வழிமொழிந்தார் ஆசிரியர்..! ஊக்கம் மிகுந்த புலியின்முன் வலிமை இருந்தும் ஊக்கம் குறைந்த யானை அஞ்சும் என்று ஊக்கத்தின் திண்மையை நிலை நிறுத்தும் வள்ளுவரை முன்னிறுத்திய ஆசிரியர் அவர் இறுதிக் குறளில் அறுதியிட்டுக் கூறும் ஊக்கம் உள்ளவரே மனிதர் .. மற்றெல்லோரும் மனித வடிவில் உள்ள மரங்களே
என்றக் கருத்தை பல்வேறு வகையில் ஆசிரியர் உறுதிப்படுத்தி வகுப்பை மிகவும் தெளிவாக நடத்தி முடித்தார்..! அந்த வகையில் அவர் மேற்கத்திய அறிஞர்களின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டினார்..!
Phsiological, Safty&Security, Social, Self esteem, Self Achivlisation என்ற ஐந்து படிநிலையில் ஒரு அதிகாரம்: ஊக்கம் உடைமை

முக்கோண பரிமாணத்தில் வடிவமைத்து திரு.ஆப்ரஹாம் மாஸ்லோ கூறிய கருத்தை வள்ளுவத்தை நம்மை விடவும் மேல்நாட்டார் எப்படி பின்பற்றுகிறார்கள் பாருங்கள்
நம் திருவள்ளுவரின் சீடர்களாக இருப்பதை ஆசிரியர் ஆய்ந்து கூறியவிதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..!
எப்போதும்போல் வகுப்பு முடிந்ததும் நடக்கும் விவாதங்கள் திசைமாறாமல் ஒருங்கமைக்கும் திரு. தமிழ்நாடன் இன்றும் இப்பணியை செவ்வனே செய்தார்..!
இறுதியாக உதயம் வழங்கிய உணவு விருந்திற்குமுன் திரு. தமிழ்நாடன் அவர்களால் சிறந்ததொரு திட்டம் முன்வைக்கப்பட்டது..! திருக்குறள் கருத்துக்களை மாணவப் பருவத்திலேயே கடைப்பிடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் தாயகத்தில் உள்ள எளிமையான அரசுப்பள்ளி மாணவமணிகளுக்கு திருக்குறள் நூலை வழங்கலாம் என்பதே அது,,! அதற்கான நன்கொடையாக மாதம் ஒரு குவைத் தினாரை ஒவ்வொருவரும் தருவதற்கு இசைந்து அப்போதே இருபது குவைத்தினார் குவிந்தது..! ஆம்..சிறுபொறிதான் தீ...எனப்பரவும்..!
நன்றி..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக