தமிழ்த்திணை -03இனை திரு.இராவணன் அவர்கள் தலைமேற்று சிறப்பித்திட, திரு.இராமன் அவர்கள் அவைத்தலைவராக இருந்து நடத்தித்தந்தார். திருமதி. தேவிரவி அவர்களும் திருமதி.பொன்னிராமன் அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து, கோல்கானூர் அதியமான் அவர்கள் குறளும் பொருளும் என்றத்தலைப்பில் குறளோதிட, திரு. செல்வக்குமார் அவர்கள் தமிழ்த்திரு.வ.சுப.மாணிக்கனார் அவர்களைப் பற்றி “நினைக்க வேண்டிய மேலோர்” என்றத்தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
தோழர்கள். கலையரசன், நம்மபாட்டு மாணிக்கம், இராமகிருட்டிணன் ஆகியோர் தமிழிசைப்பாடல்களைப் பாடி இசையரங்கை நிறைவு செய்தனர். தோழர்.நம்மபாட்டு மாணிக்கம் அவர்கள், தாமே இயற்றி, இசையமைத்து பாடிய அணுவுலைத் தீமைகள் பற்றிய பாடல் அனைவராலும் விரும்பப்பட்டது.
அடுத்து திரு.சேதுமாதவன் அவர்கள் இலக்கிய நயம் என்ற பகுதியில் “காலம் கடந்த தமிழிலக்கியம்” என்றத்தலைப்பில் உரையாற்றிட, நூலறிவோம் பகுதியில் திரு. இரகுநாதன் அவர்கள் நற்றிணையை அறிமுகம் செய்தார்.
மலேசியா சிங்கப்பூர் நாடுகளுக்காக பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஒலிம்பிக்கில் இரண்டு முறை பங்குகொண்டவரான மலேசியத்தமிழர் தமித்திரு. மாணிக்கம் அவர்களை, நிகழ்வின் தலைவரும் அவைத்தலைவரும் இணைந்து பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினர். இவரை அரங்கிற்கு திரு. விருதைபாரி அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, திரு. மாணிக்கம் அவர்கள் தனது அனுபவங்களை அவையில் பகிர்ந்துகொண்டார்.
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, ”தமிழா விழி” என்றத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற, தொல்தமிழகம் என்றப் பிரிவில் திரு.செந்தில்குமார் அவர்கள் பழந்தமிழரின் கட்டிடக்கலை குறித்து உரைநிகழ்த்தினார்.
திரு.இராவணன் அவர்கள் தமது தலைமையுரையில் நிகழ்வினையும் பொங்குதமிழ் மன்ற செயல்பாடுகளையும் வாழ்த்தி ஊக்கமளித்தார்.
திரு. நாகராசன் அவர்கள் தமிழர்கலைகள் என்றத் தலைப்பில் உரையாற்றிட, திரு.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் சிலப்பதிகாரம் தொடர்சொற்பொழிவினை நிகழ்த்தி நிறைவுசெய்தார்.
இந்நிகழ்வின் ஒளிப்படங்களை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
https://picasaweb.google.com/109260542832228774761/03?authuser=0&feat=directlink